தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்படக்கூடும் எனக் கருதப்பட்டது.
இதனை முன்கூட்டியே கணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (பிப்ரவரி 13) ஒரு கோடியே 31 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை முன்பணமாக ₹3,000 மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ₹2,000 என மொத்தம் ₹5,000 வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச்,… pic.twitter.com/n7VrMqcrb7
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 13, 2026
“>
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “யார் தடுத்தாலும், என்ன தடை வந்தாலும் இந்த ஸ்டாலின் தனது சகோதரிகளுக்குக் கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்க மாட்டான். தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத் தொகையை முடக்கப் பார்த்தார்கள், ஆனால் நமது திராவிட மாடல் அரசு முந்திக்கொண்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளதால், அடுத்த மூன்று மாதங்களுக்கு (பிப், மார்ச், ஏப்) தனியாக உரிமைத் தொகை வராது என்பதும் குறிப்பிடத்தக்கது.
