“வெளியில இருந்து யார் யாரு வந்தாலும் சரி தம்பி, ஆரம்பத்துல இருந்து நமக்காக உழைச்ச சொந்தத் தொண்டர்களை நாங்க என்னிக்குமே கைவிட மாட்டோம் !” என்று தமிழக வெற்றிக் கழகத்தின்  பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அவர்கள் பனையூர் தலைமை அலுவலகத்தில் மிக உணர்ச்சிப்பூர்வமாக உறுதியளித்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக மாற்றுக்கட்சிகளில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் தவெக-வில் தொடர்ச்சியாக இணைந்து வருவதால், தங்களுக்குக் கட்சியில் உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காது எனக் கூறிச் சில மாவட்டங்களில் உட்கட்சிப் பூசல் மற்றும் கடுமையான அதிருப்தி வெடித்துள்ள சூழலில் அவர் இந்த அதிரடி விளக்கத்தை அளித்துள்ளார்.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஆரம்பகாலத் தொண்டர்களின் தியாகமும் உழைப்பும் முழுமையாக மதிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய தகுதியான அங்கீகாரம் கண்டிப்பாகக் கிடைக்கும் என்றும், கட்சியின் அசுர வளர்ச்சிக்கு அனைவரின் பங்களிப்பும் முக்கியம் என்பதால் தொண்டர்கள் எவ்விதக் கலக்கமும் குழப்பமும் இன்றி உடனடியாகத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.