சுமக்க முடியாத அளவிற்குப் பாரமான பைகளைத் தூக்கிக்கொண்டு படிக்கட்டுகளில் ஏறும் ஒரு பெண், சுமை தாங்காமல் அப்படியே நிலைதடுமாறி படிக்கட்டுகளில் சுருண்டு விழும் அதிர்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண் வலியால் துடித்துக் கொண்டிருக்க, அடுத்த சில நொடிகளில் அங்கு வரும் அவரது கணவர், தன் மனைவிக்கு என்ன ஆனது என்று கூட பார்க்காமல், அவதிப்பட்டு விழுந்து கிடக்கும் மனைவியைக் கண்டுகொள்ளாமல் தன் கையில் இருக்கும் உடமைகளைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருக்கிறார். மனிதநேயமற்ற இந்தச் செயல் அங்கிருந்த கேமராவில் பதிவாகி, இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் ரத்தத்தைக் கொதிக்க வைத்துள்ளது.
इंसानियत मर चुकी है! इस बेरहम पति का घिनौना सच देखिए😡👇
वीडियो में साफ़ दिख रहा है कि कैसे एक मजबूर महिला भारी सामान के बोझ से सीढ़ियों पर बेहोश होकर गिर जाती है। लेकिन इस कसाई दिल पति को ज़रा भी फर्क नहीं पड़ा।
वो आया और अपनी तड़पती पत्नी को हाथ तक नहीं लगाया, बल्कि सिर्फ… pic.twitter.com/btFJ4M0hIg— Dr. Sandeep (@Dr_sandeep01) June 17, 2026
மனைவி ஆபத்தான நிலையில் விழுந்து கிடக்கும்போது, அவளுக்கு உதவாமல் அலட்சியமாக நடந்துகொண்ட அந்த கணவனின் கொடூரமான அணுகுமுறையைக் கண்டு சமூக வலைதளவாசிகள் தங்களின் கடுமையான கண்டனங்களையும் ஆத்திரத்தையும் பதிவு செய்து வருகின்றனர். “ஒரு திருமண பந்தம் என்பது பரஸ்பர அன்பு, கவனிப்பு மற்றும் பொறுப்பின் மீது கட்டமைக்கப்பட வேண்டும்; ஆனால் இங்கே மனிதநேயமே செத்துவிட்டது” என்று பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். ஒரு சிறிய வீடியோவை வைத்து ஒட்டுமொத்த சூழ்நிலையையும் கணிக்கக் கூடாது என்று ஒரு சிலர் கூறினாலும், பெரும்பாலான இணையவாசிகள் இந்த வீடியோவில் தெரியும் கணவனின் அலட்சியப் போக்கைக் கடுமையாகக் கிழித்துத் தொங்கவிட்டு வருகின்றனர்.
