கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்டில் நடிகர் சிம்பு நடித்து இருந்த “வெந்து தணிந்தது காடு” படம் கடந்த வருடம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உட்பட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகிய இப்படம் விமர்சனம் மற்றும் வருமான ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும்  ஹிட்டடித்தது.

அதிலும் குறிப்பாக மல்லிப்பூ எனும் பாடல் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். இந்நிலையில் மல்லிப்பூ பாடலின் புது அப்டேட் வெளியாகி உள்ளது. அந்த வகையில் மல்லிப்பூ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது. இதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்து உள்ளது.