நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் சின்னத்திரை நடிகர் சங்க தலைவரும் ஆவார்.
இந்நிலையில் இவர் ஒரே நாளில் சகோதரியையும், சகோதரனையும் இழந்த மிக துயரமான சம்பவம் தமிழ் திரையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற சகோதரர் ரங்கநாதனும் அதிகமாக அழுது கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஒரே நாளில் உடன்பிறப்புகளை இழந்ததால், போஸ் வெங்கட் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.