“தலைவர்ங்க தப்பா முடிவு எடுக்குறாங்க சார், தொண்டனுங்க நாங்க என்னனு நினைச்சீங்க ?” என்று கொதித்தெழுந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளரும், மண்டல பொறுப்பாளருமான எஸ்.ஆர்.எஸ்.இப்ராஹிம், தனது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்து சத்தியமூர்த்தி பவனுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் திமுக கூட்டணி நெல்லிக்காய் மூட்டை போல சிதறி வரும் வேளையில், தவெக ஆட்சி அமைந்த பிறகும் கூட “திமுகவுடன் தான் கூட்டணி தொடர வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பிடிவாதம் பிடிப்பது அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளுக்கு எதிரானது என அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் கட்சியின் டாப் தலைவர்களின் இரட்டை நிலைப்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ள இப்ராஹிம், மிகுந்த வேதனையுடன் தனது அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே தோழமைக் கட்சிகள் ஒவ்வொன்றாக கழன்று வரும் நிலையில், காங்கிரஸிலும் உள்கட்சி பூசல் வெடிச்சு முக்கிய நிர்வாகி வெளியேறியிருப்பது அறிவாலய வட்டாரத்தையும், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட மூத்த தலைவர்களையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
