அசத்தப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் காமெடியில் கலக்கியவர் தான் கோவை குணா. இவர் உயிரிழந்து விட்டதாக வெளியாகி உள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் உடல்நல குறைவால் கோவையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இவரின் மரணத்திற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். டிவி மட்டுமல்லாமல் கோவை குணா திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னை காதல் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்த பட வாய்ப்புகள் வந்தாலும் அது நடிப்பதை தவிர்த்து வந்தார். டிவி மற்றும் மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மட்டுமே கலந்து கொண்டு வந்தார்.