அமராவதி திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிய அஜித், பின் ஆசை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், முகவரி, தீனா, வில்லன் உட்பட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை தன்வசம் படுத்திக்கொண்டார். இவர் காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைப்பாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் அஜித் மற்றும் ஷாலினி இருவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. அஜித்-ஷாலினி தன் குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்று இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அஜித்-ஷாலினி இருவரும் இணைந்து நடித்த உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு எனும் பாடலின் வரிகளை பதிவிட்டு வருகின்றனர்.