தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது கோரிக்கைகளுக்காகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிர்வாகச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் தற்போது புதிய புகைச்சலைக் கிளப்பியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் ‘ஸ்ரீவைகுண்டம்’ தொகுதியில் போட்டியிடப் போவதாக அவர் தன்னிச்சையாக அறிவித்துள்ளது, கூட்டணி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​தொகுதிப் பங்கீடு குறித்து முறையான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே, எர்ணாவூர் நாராயணன் இவ்வாறு தன்னிச்சையாகத் தொகுதி அறிவிப்பை வெளியிட்டது திமுக தலைமையைப் அதிருப்தி அடையச் செய்துள்ளது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு விவாதங்கள் போய்க்கொண்டிருக்கும் நிலையில், இவருடைய இந்த அதிரடி முடிவு திமுக கூட்டணியில் பெரும் பிளவையும் முனுமுனுப்பையும் உருவாக்கியுள்ளது. தேர்தலுக்கு முன்பே தொகுதிகளைக் குறிவைத்து நடக்கும் இத்தகைய மோதல்கள் அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.