பாஜக மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை மற்றும் அரசியல் பிரமுகர் குஷ்பு, இந்த நியமனத்துக்கான கருத்து தெரிவித்தபோது, நடிகர் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த குஷ்பு, “விஜய் எப்போது இருந்தாலும் எனக்கு தம்பிதான். அவர் அரசியல் ரீதியாக வேறு இடத்தில் இருந்தாலும், அவருக்கு என் வாழ்த்துக்கள்” என்றார். மேலும், “விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்கிறார் என்பதற்கு அவர் சொல்வது அவருடைய கருத்து. ஆனால், வருகிற தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா என்பதை முடிவெடுப்பது மக்கள் தான்” எனவும் தெரிவித்தார்.
