சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 73360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 10003 ரூபாய்க்கும், ஒரு சவரன் 80024 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் என்ற கிராமுக்கு 2 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 125 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 125000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.