ஜெயலலிதா குறித்த கடம்பூர் ராஜு பேச்சுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பது மிகப் பெரிய துரோகம் என்றும், பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் அறிக்கை. வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  நடைபெற்ற அதிமுக-பாஜக கூட்டணித் திட்ட ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசிய ஒரு கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“1998-ல் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைத்ததை அடுத்து, இடையில் சுப்பிரமணியசாமி பேச்சை வைத்துக் கொண்டு ஒரு ஓட்டில் பாஜகவை வீழ்த்தியது வரலாற்றுப் பிழை ஆகியது. இதனால்தான் திமுக ஆட்சி அமைந்தது. இன்று பாஜகவை தீண்டத் தகாத கட்சியாக திமுக பார்க்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்து, ஜெயலலிதாவின் முடிவுகளை விமர்சிப்பது போல வெளியானதால் அதிமுக தொண்டர்கள் மற்றும் வட்டாரங்களில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

“>

 

இதுகுறித்து விளக்கம் அளித்த கடம்பூர் ராஜு, “1999-ல் திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்குப் பின்னாலான சூழ்நிலையைப் பற்றித்தான் நான் கூறினேன். ஜெயலலிதா அவர்கள் எப்போதும் பாஜகவுடன் கூட்டணி வைத்த முதல் தலைவர். 30 தொகுதிகள் வென்று, பாஜகவுக்கு மத்திய ஆட்சியினைத் தந்த முக்கிய தலைவி. அவர் மீது விமர்சனமே இல்லை. என் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டு திரித்துக் கூறப்படுகிறது. அம்மா அவர்கள் எங்கள் வழிபடக்கூடிய தெய்வம். கனவிலும் அவரைப் பற்றி தவறாக பேசமாட்டோம்” என்றார்.

இதேவேளை, தற்போதைய அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சிக்க திமுகவுக்கு நேரடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பேச்சு வந்ததாகக் கூறப்பட்டாலும், ஜெயலலிதா மீது எதிர்ப்பாக பேசப்பட்டு விட்டது என பலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா குறித்த கடம்பூர் ராஜு பேச்சுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.