தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ நேற்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மெகா திட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதலமைச்சர் விஜய் அவர்கள் நேரில் கலந்துகொண்டு மிக பிரம்மாண்டமாகத் தொடங்கி வைக்க உள்ளார்.

​இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காகத் தமிழக அரசு தரப்பிலிருந்து முதற்கட்டமாக ரூ.755.83 கோடி நிதி அதிரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் தங்கம் பெறத் தகுதியானவர்கள் என்றும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என்றும் அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த அதிரடித் தங்கம் வழங்கும் திட்டம் தற்போது ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.