தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் அறிவித்த “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு” தற்போது மிகப்பாரிய தொகையை நிதி ஒதுக்கீடு செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் செம குஷியைக் கிளப்பியுள்ளது.
இந்தத் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக ₹755 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் அரசாணை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குத் ‘தாய்மாமன்’ என்ற உன்னதமான உறவின் பெயரால் தங்க மோதிரம் வழங்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை, வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கவுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை தவெக அரசு அடுத்தடுத்து அசுர வேகத்தில் கையில் எடுத்து நிதி ஒதுக்கி வருவதால், இந்தத் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ தற்போது சோசியல் மீடியாவில் பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று காட்டுத்தீயாய் ட்ரெண்டாகி வருகிறது.
