அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக புறக்கணித்ததையடுத்து, அவர் மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய தவெகவுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைக்கலாம் என பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன் அடிப்படையில், இன்று தனது முக்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தும் ஓபிஎஸ், தவெகவுடன் கூட்டணி அமைப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது 2026 தேர்தலுக்கு முன் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
