பெங்களூருவில் மூன்று நாள் பழைய சாம்பாரைச் சூடுபடுத்திப் பரிமாறியதால் ஏற்பட்ட குடும்பச் சண்டையில், 27 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பார் பழையதாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் திட்டியதால் மனமுடைந்த அந்தப் பெண், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லியைத் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

திருமணமாகி ஐந்து ஆண்டுகளான நிலையில், இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்தத் துயரமான சம்பவம் குறித்து பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.