கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக (KSRTC) டிப்போவில் ஓட்டுநராக வேலைக்கு வந்த ஒருவரிடம் வழக்கம்போல் breath analyser மூலம் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில், அவரது மதுபான அளவு 0 முதல் 10 என மிக அதிகமாக வர, அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால், ஓட்டுநர் உறுதியாக “நான் மது அருந்தவில்லை” என மறுத்ததோடு, உடனே இரத்த பரிசோதனை செய்யக் கோரினார்.

விவரம் தெரிந்து அதிர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், சம்பவத்தன்று டிப்போவிலுள்ள ஓர் ஊழியர் தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த பலாப்பழத்தை, பிற ஊழியர்களுடன் பகிர்ந்திருந்தது தெரியவந்தது. அந்த பலாப்பழ விருந்தில் சாப்பிட்டவர்களில் ஒருவராக இருந்தார் அந்த ஓட்டுநரும். அவருடன் பலாப்பழம் சாப்பிட்ட மூன்று ஊழியர்களுக்கும் breath analyser சோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்தது.

இந்த unusual but real சம்பவம், பலாப்பழத்தில் இயற்கையாக உள்ள புளிப்பு தன்மை  (fermented content) காரணமாக, breath analyser தவறான மதுபான அளவைக் காட்டும் என்பதை நிரூபித்துள்ளது. இதனால், உண்மையில் மது அருந்தாதவரும், குடித்ததாக தவறாக குற்றம் சுமத்தப்பட வாய்ப்பு இருப்பதை மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது அரசு ஊழியர்கள், breath test முடிவுக்கு பின்னர் இரத்த பரிசோதனை கட்டாயமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக பரவி வருகிறது. “மதுவுக்கு எச்சரிக்கை வார்த்தை, இனிமேல் பலாப்பழ மூட்டையிலும் எழுத வேண்டிய நிலைதான்!” என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஆனால், இந்த சம்பவம், தவறான சோதனை முடிவுகள் ஒரு நேர்மையான ஊழியரின் வாழ்வையே பாதிக்கக்கூடியது என்பதால், breath analyser சோதனையில் கூடுதல் கவனம் தேவை என்பதை சுட்டிக்காட்டுகிறது.