உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 5 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் வாழ்ந்து வந்த கணவர் ஒருவர், தனது மனைவியின் தகாத  உறவை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த நிலையில், மனைவியிடம் நேரடியாக கேள்வி கேட்பதற்கான அவரது உருக்கமான வீடியோ, ‘Ghar Ke Kalesh’ என்ற X தள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

வீடியோவில், “நீ என் வாழ்க்கையை பாழாக்கிட்ட, 5 வருடம் நான் வீணாக வாழ்ந்தேன்” என்று கணவர் கண்ணீர் விட்டு கூற, மனைவி அமைதியாகவும், எந்த வருத்தமும் இல்லாமல் தைரியமாக பதிலளிக்கிறார். மேலும், வீடியோவில் ஒரு பெண் உறவினரை மரியாதையின்றி பேசும் மனைவியைக் கண்டித்து, கணவர் கோபத்தில் கட்டுப்பாடின்றி குரல் உயர்த்தும் காட்சியும் பதிவாகியுள்ளது. இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் பரவியவுடன், நெட்டிசன்கள் “இப்படி நடக்கறதாலதான் இனிமே திருமணமே வேண்டாம்னு தோணுது”, “அவங்க வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டாங்க” என வேதனைவும், கோபமும் கலந்த கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். திருமண உறவுகளில் சீரழிவின் முக்கிய காரணமாக நம்பிக்கையின்மை, சமூக ஊடகங்களின் தாக்கம், பொறுப்பின்மை ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

“>

 

இந்த சம்பவம், நவீன காலத் திருமணங்களில் ஏற்படும் நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. உண்மையான அன்பும், நேர்மையும் இல்லாமல் உறவுகள் கட்டமைக்கப்படுவது போல விபரீதங்களை உருவாக்குவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இளம் தம்பதிகள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைக்கவும், உறவுகளை பொறுப்புடன் பேணவும் வேண்டிய அவசியம் உள்ளதாக வலியுறுத்தப்படுகிறது.