தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் திருப்பூரில் பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் தினமும்  வியாபாரத்தை முடித்துவிட்டு கடையில் படுத்து தூங்குவதே வழக்கம். நேற்று முருகேசன் வழக்கம் போல வியாபாரத்தை முடித்துவிட்டு கடையில் தூங்கியுள்ளார்.

இன்று அதிகாலை திடீரென கடையிலிருந்து அதிகமாக கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேசன் உடனடியாக கடையை விட்டு வெளியே ஓடி வந்தார். அதன்பின்பே முருகேசன் கடையில் தீ விபத்து ஏற்பட்டதை உணர்ந்தார். அதற்குள் தீ வேகமாக பரவ ஆரம்பித்தது.

இதனால் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எறிய ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதற ஆரம்பித்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயே அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்‌.

சில மணி நேர போராட்டத்திற்கு பின்பே அந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்களால் அக்கம் பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்க முயன்றது.‌ இந்த விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியது.

அந்த பொருட்களின்‌ மொத்த மதிப்பு சுமார்‌ 30 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து முருகேசன்‌ அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.