விண்வெளியில் இருப்பவர்கள் இனி தங்கள் குடும்பத்தினருடன் ‘வாட்ஸ்அப்’ காலில் பேசலாம்! அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, பல தசாப்தங்களாகப் பின்பற்றி வந்த கடுமையான தடையை நீக்கி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. இதுவரை விண்வெளி வீரர்கள் தங்களது சொந்த ஸ்மார்ட்போன்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் நீடிக்கப்பட்ட இந்தத் தடை தற்போது அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

​இனி விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் தங்களுக்குப் பிடித்தமான போன்களைக் கையோடு எடுத்துச் செல்லலாம் என்பதால், அங்கிருந்தபடியே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போடுவது முதல் சொந்தங்களுடன் வீடியோ காலில் பேசுவது வரை அனைத்தும் சாத்தியமாகப் போகிறது. நீண்ட காலம் விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்கள் தனிமையில் வாடுவதைத் தவிர்க்கவும் இந்த ‘ஸ்மார்ட்போன் பாலிசி’ உதவும் என நாசா நம்புகிறது. பூமியைத் தாண்டி விண்வெளியிலும் இனி டிஜிட்டல் புரட்சி வெடிக்கப் போவது உறுதி!