தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்துச் செய்திகள் இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், நடிகை த்ரிஷா ‘நான் முதலமைச்சராக ஆசைப்படுகிறேன்’ எனப் பேசிய பழைய நேர்காணல் ஒன்று தற்போது வெளியாகி விவாதப் பொருளாகியுள்ளது.
திரையுலகில் பல ஆண்டுகளாக விஜய் – த்ரிஷா இடையிலான நட்பு குறித்துப் பல்வேறு யூகங்கள் பேசப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக இந்த விவகாரம் சினிமாவைத் தாண்டி அரசியல் தளத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் இது குறித்துக் கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய்யின் மனைவி சங்கீதா தரப்பிலிருந்து விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள், இந்த விவகாரத்தை மீண்டும் சூடாக்கியுள்ளன. விஜய் ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருப்பதே இதற்குக் காரணம் என சங்கீதா தரப்பில் கூறப்படுவதாகச் செய்திகள் பரவ, மீண்டும் த்ரிஷாவின் பெயர் இணைய வீதிகளில் அடிபடத் தொடங்கியுள்ளது.
இந்தச் சூழலில், சன் டிவியின் முன்னாள் தொகுப்பாளர் விஜய் சாரதிக்கு த்ரிஷா அளித்த பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?” என்ற கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல் “நான் சி.எம். (முதலமைச்சர்) ஆக வேண்டும்” என த்ரிஷா பதிலளிக்கிறார். “உண்மையாகவா?” எனத் தொகுப்பாளர் கேட்க, “நிச்சயமாக, உறுதியாகச் சொல்கிறேன்” என அவர் பதிலளிக்கிறார்.
நான் CM ஆகனும்! – திரிஷா
அப்போ புரியல… இப்போ புரியுது!!! – இன்னும் 10 வருடங்கள் கழித்து தற்குறிகள்! 🤣🤣🤣 pic.twitter.com/IVPvtjfrSO
— ❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 (@SKumarPTM) March 1, 2026
விஜய் தற்போது முழுநேர அரசியலில் இறங்கி ‘தமிழக வெற்றிக் கழகம்’ மூலம் முதல்வர் நாற்காலியை நோக்கிப் பயணித்து வரும் வேளையில், த்ரிஷாவின் இந்தப் பழைய வீடியோ பேசுபொருளாகியுள்ளது. இதை வைத்து, “விஜய் முதலமைச்சர் என்றால், த்ரிஷா துணை முதலமைச்சரா?” எனப் பலரும் சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர்.
திரையுலகச் சர்ச்சைகளும், அரசியல் ஆசைகளும் பின்னிப் பிணைந்துள்ள இந்த விவகாரம், தமிழக அரசியலில் ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
