தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் பொதுக்கூட்டம் ஒன்றில் கூறிய குட்டி கதைக்கு, பிக்பாஸ் புகழ் ஜூலி எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள காணொளி இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகிலிருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சிக்கு ‘விசில்’ சின்னத்தைப் பெற்று தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் கரூரில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற விஜய், ஜல்லிக்கட்டு காளை தொடர்பாக ஒரு குட்டி கதையைக் கூறினார். இந்தக் கதையில் சொல்லப்பட்ட கருத்துக்கள், உயிரிழந்தவர்களின் வலியை கொச்சைப்படுத்துவது போல் இருப்பதாகக் கூறி பிக்பாஸ் ஜூலி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து ஜூலி வெளியிட்ட காணொளியில், 50 பேர் இறந்தது 50 பேராகவே இருக்கட்டும் அண்ணே… அதை 500 பேராக ஆக்கிவிடாதீர்கள்” என விஜய்யை நேரடியாகச் சாடியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள், ஜூலியை சமூக வலைதளங்களில் கடுமையாகத் திட்டியும், ட்ரோல் செய்தும் பதிவுகளை வெளியிட்டனர்.
ரசிகர்களின் எதிர்ப்பையும் மீறி, ஜூலி தற்போது மீண்டும் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார். அதில், “What is this VIJAY Anna? It’s very wrong VIJAY ANNA” என்று விஜய்யை கேலி செய்யும் தோனியில் பேசியுள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ஜூலியின் இந்த அடுத்தடுத்த பதிவுகள் தேவையற்ற குழப்பத்தை விளைவிப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
