அரசு பள்ளி மாணவர்களுக்குப் படம் இல்லாமல் வழங்கப்படும் ஸ்கூல் பேக் (School Bag) விவகாரத்தில், தவெகவினர் பரப்பி வரும் பொய் செய்திகளைத் திமுக அமைச்சர் கீதா ஜீவன் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே ஸ்கூல் பேக்குகளில் எந்தவொரு அரசியல் தலைவரின் படமும் இல்லாமல், வெறும் அரசு சின்னத்தோடு மட்டும்தான் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​தற்போது பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் பேக்குகள் அனைத்தும், தளபதியார் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக் காலத்தில் முறைப்படி டெண்டர் கோரப்பட்டு, அரசாங்கத்தால் வாங்கி வைக்கப்பட்டவை ஆகும். ஆனால், இதற்கு தற்போதைய தவெகவினர் “எங்கள் தலைவர் வந்தவுடன் ஸ்கூல் பேக்கில் போட்டோ வைக்கவில்லை பாருங்கள்” என்று மக்கள் மத்தியில் தேவையில்லாமல் பொய் பில்டப் கொடுத்து விளம்பரம் தேடி வருகிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.