தமிழக வெற்றி கழகத்தினர் (தவெக) நாளுக்கு நாள் செய்து வரும் அத்துமீறல்களையும் அட்ராசிட்டிகளையும் பட்டியலிட்டு திமுக அமைச்சர் கீதா ஜீவன் அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெகவினர் ஒவ்வொரு கடை கடையாகச் சென்று மாமூல் கேட்டு மிரட்டுவதாகவும், பள்ளி நிர்வாகங்களில் கூட தேவையின்றி அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்துகொள்வதாகவும் சாடியுள்ளார். குறிப்பாக, பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் (PTA) ஆசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில், தாங்கள் பரிந்துரைப்பவர்களைத்தான் பணியமர்த்த வேண்டும் என்று கூறி பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களை (HM) அவர்கள் மிரட்டுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பையில் மைக், கையில் செல்போன் வீடியோவோடு அலைந்துகொண்டு தலைமை ஆசிரியர்களை அவதூறாகப் படம் பிடிப்பது, டாஸ்மாக் கடைகளில் புகுந்து தங்கள் தலைவரின் காலண்டரைத்தான் மாட்ட வேண்டும் என சண்டை போடுவது என எல்லா இடங்களிலும் “எங்க முதலமைச்சர் படம் வை” என்று மிரட்டி வருவதாகக் கூறி, தவெகவினரின் இந்த அட்ராசிட்டிகள் பற்றி முதலமைச்சருக்குத் தெரியுமா என்று அமைச்சர் கீதா ஜீவன் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
