உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள  கல்லூரியில், வகுப்பறையில் நாகப்பாம்பு ஒன்று தோன்றியது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக வகுப்பறையின் தரையிலிருந்து ‘சீறும்’ சத்தம் ஒலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் சந்தேகத்துடன் பார்த்த ஆசிரியர் ஒருவர், தரையிலிருந்து நாகப்பாம்பின் விரித்த தலையை  கண்டதும் அதிர்ச்சியடைந்தார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பீதி அடைந்த நிலையில் உடனடியாக வகுப்புகள் நிறுத்தப்பட்டன.

தகவல் அறிந்ததும், பாம்பு நண்பர் அஜய் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டார். அவர் மேற்கொண்ட சோதனையில், வகுப்பறையின் தரைக்குள் உள்ள ஒரு குழியில் விஷமுள்ள நாகப்பாம்பு மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாம்பை வெளியே எடுக்க தரையை உடைக்க வேண்டிய நிலை உருவானது. இருந்தும், பாம்பு வெளியே வரவில்லை. பின்னர் குழியில் தண்ணீர் ஊற்றி, பாம்பை வெளியே வர வைக்கப்பட்டது. நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அனுப்பப்பட்டது.

“>

 

இந்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வகுப்பறையில் விஷப்பாம்பு ஊடுருவிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மீட்பு பணிகள் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் நிம்மதியுடன் மூச்சுவிட்டுள்ளது. இதனை அடுத்து பள்ளியில் முழுமையான பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.