உலகளவில் நிலவி வரும் பதற்றமான சூழலால் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் பரவி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வினோதமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒருவர் பழைய மற்றும் காலியான எல்பிஜி சிலிண்டரைத் தூக்கி எறியாமல், அதை ஒரு புதுமையான அடுப்பாக மாற்றியுள்ளார்.
சிலிண்டரின் மேல் பகுதியை வெட்டி, அதன் உள்ளே விறகுகளை வைத்து எரிக்கும் வகையில் அவர் செய்துள்ள இந்த மாற்றம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. @Abhimanyu1305 என்ற எக்ஸ் (X) கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இந்த ‘ஜுகாட்’ (Jugaad) எனப்படும் கைவினைப் புத்திசாலித்தனத்தைப் பாராட்டி “திறமையான கண்டுபிடிப்பு” என்று கூறி வருகின்றனர்.
भारत की आधुनिक टेक्नोलॉजी, खाना सिलेंडर से ही बनेगा। pic.twitter.com/P0Rro9n7ul
— Abhimanyu Singh (@Abhimanyu1305) March 12, 2026
“>
அதே சமயம், சிலிண்டர்களை வெட்டுவது மற்றும் இது போன்ற சோதனைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என்றும், போதிய பாதுகாப்பு இன்றி இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எளிய பொருட்களை வைத்துத் தங்களுக்குத் தேவையான தீர்வுகளைக் கண்டறியும் மக்களின் படைப்பாற்றலுக்குச் சான்றாக இந்த வீடியோ தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
