விழுப்புரத்தில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நடிகை நயன்தாரா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு மற்றும் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை குறித்துக் கடுமையாக விமர்சனம் செய்த சி.வி.சண்முகம், திடீரென முதல்வர் ஸ்டாலினின் “உங்கள் கனவைச் சொல்லுங்கள்” என்ற கருத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், “எனக்கு நயன்தாரா வேணும், இதை முதல்வர் நிறைவேற்றுவாரா?” என்று அவர் பேசியது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவன் வீட்டு பெண்களை பேசினால் சும்மா இருப்பானா.. pic.twitter.com/xfhyP2Y9o3
— கல்கி குமார் (@kalgikumaru) March 17, 2026
அரசியல் போராட்ட மேடையில் ஒரு முன்னணி நடிகையைப் பற்றி இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது அநாகரீகமானது என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுகவை விமர்சனம் செய்ய எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் பேசிய சி.வி.சண்முகத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பேச்சு அதிமுக கட்சிக்குள்ளேயே பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.
