பொதுவாக பாம்பு மற்றும் கீரிப்பிள்ளையின் சண்டை என்றாலே அதில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இயற்கையின் விசித்திரமான இந்த மோதல்களைப் பார்ப்பதற்கே ஒரு தனி கூட்டம் இருக்கும். அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ராஹத்கர் கோட்டையின் நுழைவாயிலில், பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் இடையே நடந்த ஒரு அரிய மற்றும் உக்கிரமான சண்டையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இயற்கையின் விதிகளின்படி வழக்கமாக நடக்கும் பாம்பு-கீரி சண்டைகளைப் போலல்லாமல், இந்த மோதல் பார்ப்பவர்களை உரைய வைக்கும் வகையில் அமைந்திருந்தது. கோட்டையின் பிரம்மாண்டமான கதவின் அருகே, எதிர்பாராத விதமாக இந்த இரண்டு உயிரினங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. தொடக்கத்தில் இருந்தே இரு உயிரினங்களும் தங்களின் முழு பலத்தையும் பிரயோகித்து ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டன.
https://www.facebook.com/reel/1439651614858360/?mibextid=ZZyLBr
இந்த சண்டையின் போது, ஒரு கட்டத்தில் பாம்பு கீரிப்பிள்ளையை விட கடுமையான பிடியை எடுத்தது. வழக்கமாக கீரிப்பிள்ளையின் கை ஓங்கி இருக்கும் நிலையில், இந்த சண்டையில் கீரிப்பிள்ளை மிகவும் பலவீனமாகவும், பாம்பின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் தவிப்பது போலவும் காட்சியளித்தது. கோட்டைக்கு வந்திருந்த பொதுமக்கள், கீரிப்பிள்ளை இவ்வளவு பலவீனமாக போராடுவதை இதற்கு முன் பார்த்ததில்லை என ஆச்சரியத்துடனும், அதே சமயம் ஒருவித பயத்துடனும் இந்த அரிய காட்சியைத் தங்களது மொபைல் போன்களில் படம் பிடித்தனர்.
சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, பார்ப்பவர்களைச் சுவாரசியத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. வரலாற்றின் சாட்சியாக விளங்கும் ஒரு கோட்டையின் வாசலில், இயற்கையின் இரு முக்கிய உயிரினங்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக நடத்திய இந்த மரணப் போராட்டம், பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
