சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், வினோதமான மற்றும் தனித்துவமான வீடியோக்களே மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வகையில், தற்போது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ‘செலோ டேப்’ மூலம் ஒரு கட்டிலை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்த டேப் கட்டில் மீது அமர்ந்தால் அது அறுந்துவிடும் என்று தோன்றினாலும், அந்த நபர் அதன் மேல் ஏறி அமர்ந்த பிறகும் கட்டில் உடையாமல் உறுதியாக இருப்பது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 91 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, கிராமப்புறங்களில் சாதாரணமாகக் காணப்படும் கயிறு கட்டில்களுக்கு மாற்றாக ஒரு புதிய ‘ஜுகாட்’ எனப்படும் கைவினை நுணுக்கத்தைக் காட்டுகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள், “நமது நாட்டில் திறமைசாலிகளுக்குப் பஞ்சமே இல்லை” என்றும், “இது ஒரு மிரட்டலான ஐடியா” என்றும் பாராட்டி கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
अमेरिका भी कहेगा यह तो टैप वाली खटिया है 😄😃🔥 pic.twitter.com/zCy7Uo6xVm
— Toofan Ojha (@RealTofanOjha) March 14, 2026
“>
மிகக் குறைவான செலவில் டேப்பை மட்டுமே வைத்து ஒரு கட்டிலையே தயார் செய்த அந்த நபரின் புத்திசாலித்தனம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
