அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும்  நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளதையடுத்து கட்சியில் பொறுப்பாளர்கள் நியமிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்சி ரீதியாக 100 மாவட்டங்களை உருவாக்கி நிர்வாகிகளை கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த மாநாட்டை தென் தமிழகத்தை குறிவைத்து மதுரையில் நடத்த த.வெ.க தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் கட்சியன் சின்னம் மற்றும் கொடியின் நிறத்தை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.