அமைச்சர் மு. பெ. சாமிநாதனின் தந்தை சா.பெருமாள் சாமி (94) உடல் நலக் குறைவால் கோவையில் இன்று காலமானார். இவர் திமுக வின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் மீதான ஈர்ப்பால் திராவிட அரசியலை தமிழகம் முழுவதும் பரப்பியவர். இவரது மறைவுக்கு திமுக அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சரை செலுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.