கர்நாடக மாநிலம் தாவண்கெரே தாலுகாவில் உள்ள சுங்கச்சாவடியில், கட்டணம் செலுத்த நின்றுகொண்டிருந்த கார் மீது வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும், சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும்போது நெஞ்சை உறைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
தாவண்கெரே சுங்கச்சாவடியில் வரி செலுத்துவதற்காக ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அதிவேக கன்டெய்னர் லாரி, எதிர்பாராதவிதமாக அந்தக் காரின் பின்னால் பயங்கரமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் கார் முன்னோக்கித் தள்ளப்பட்டபோதிலும், அதிர்ஷ்டவசமாக உள்ளே இருந்த பயணிகளுக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்; பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த கோர விபத்து சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
A major accident was narrowly averted at a toll plaza in Davanagere taluk after a speeding container truck rammed into a car that had stopped to pay the toll fee.
According to reports, the container truck, travelling at high speed, crashed into the car from behind. The impact… pic.twitter.com/iJZalEwIqm
— Hate Detector 🔍 (@HateDetectors) August 12, 2026
“>
இந்தச் சம்பவம் குறித்துத் தாவண்கெரே கிராமக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
