மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக உடனான தேமுதிக பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. தேமுதிகவின் மாநிலங்களவை எம்பி கோரிக்கையை பாஜக நிராகரித்த நிலையில் தேமுதிக தொண்டர்களின் விருப்பப்படி அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக தீவிரம் காட்டி வருகிறது.