கடந்த வாரம் ஒரு கிலோ பூண்டு 500 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று மளமளவென்று குறைந்துள்ளது. திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ பூண்டு இன்று 200 குறைந்து 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.