இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான Deepfakes மற்றும் குரல் பதிவுகள் மூலம் சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை மக்கள் அதனை விரும்ப ஆரம்பித்து விட்டனர். இது போன்ற நிலையில் மெட்டா நிறுவனம் இதற்காக ஒரு சிறப்பு ஹெல்ப்லைனை அமைகிறது. ஆங்கிலம் தவிர whatsapp ஹெல்ப்லைன் chatbot வடிவத்தில் மூன்று மொழிகளில் அதாவது இந்தி, தமிழ், தெலுங்கு ஆகியவற்றில் கிடைக்கிறது.

பயனர்கள் இந்த ஹெல்ப்லைன் எண்ணுக்கு சாட்போட் மூலம் உரை, படம் மற்றும் வீடியோ செய்திகளை விசாரணைக்காக அனுப்பலாம். இந்த ஹெல்ப்லைன் அடுத்த மாதம் முதல் பொதுமக்களுக்கு கிடைக்க உள்ளது. இதன் மூலம் மக்களுக்கு அனுப்பப்படும் தவறான தகவல்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அடையாளம் காண முடியும். முழு தொழில்நுட்பத் துறையும் இதற்கான தெளிவான மற்றும் கட்டாய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.