விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகத்தில் அதிக உறுப்பினர்களை சேர்ப்போருக்கு நிர்வாக பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுது.

உறுப்பினர் சேர்க்கைக்கென செயலி மூலம் ஒவ்வொருவரும் தங்களுக்கான எண் மூலம் உறுப்பினரை சேர்க்கலாம்; இதற்கான செயலியை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய த.வெ.க திட்டமிட்டுள்ளது. சுமார் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க திட்டமிட்டுள்ளது.