தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது.

இந்நிலையில் இதன் காரணமாக ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாளை (பிப்ரவரி 23) முதல் பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் இந்த முகாம்களில் மேற்கொள்ளப்படும்.