சென்னை மாவட்டம் தேனாம்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் புரசைவாக்கத்தில் இருந்து பைக் டாக்ஸியை பயன்படுத்தி தேனாம்பேட்டைக்கு வந்து சென்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் பைக் டாக்ஸியை புக்கிங் செய்தபோது சதீஷ்குமார் என்பவர் டிரைவராக வந்தார். நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

பொருளாதார தேவைக்காக பைக் டாக்ஸி ஓட்டி வருவதாக கூறிய சதீஷ்குமார் தினமும் பணம் கொடுத்தால் தேனாம்பேட்டை அழைத்துச் சென்று விடுவதாக கூறினார். கூறியபடி கடந்த 20 நாட்களாக சதீஷ்குமார் அந்த பெண்ணை பைக்கில் அழைத்து சென்றார்.

நேற்று முன்தினம் அண்ணா மேம்பாலம் அருகே சென்றபோது சதீஷ்குமார் அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்ந்தது புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர்.