சிவகங்கை மாவட்டம், சாமியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் (வயது 60), பல ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். இன்று(ஆகஸ்ட்-2)  காலை அவர் வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அவரை சுற்றி வளைத்து, கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை பழிவாங்கும் நோக்கத்திலா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரணம், கருப்பையாவின் மகன் விக்கி என்ற கருணாகரன், தி.மு.க. நிர்வாகி பிரவீன் கொலை வழக்கில் முந்தைய காலத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக பழிக்குப் பழி அடிக்க, கருப்பையா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.