ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஜீமானி ஜீவாங் மற்றும் 20 வயது இளம் பெண் மாலோதி ஆகிய இரு பெண் தொழிலாளர்கள், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் அமோனியா எரிவாயு கசிவு காரணமாக மூச்சுத்திணறிப் பரிதாபமாக உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூரமான நச்சு வாயு கசிவு விபத்தில் சிக்கிய இரு பெண் தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியாகியுள்ளனர்.

பிழைப்பு தேடி வெளிமாநிலத்தில் இருந்து வந்து வேலை பார்த்து வந்த இரு இளம் பெண்கள் நச்சு வாயு கசிவால் கொடூரமாக உயிரிழந்த இச்சம்பவம் ஒட்டுமொத்த தொழிலாளர்கள் மத்தியிலும், அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்துப் போலீஸாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் ஆலைக்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.