துலாம் ராசி அன்பர்களே,

இன்று உடல் ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டு மாறிவிடும். மனதில் அன்பும் கருணையும் மிகுந்து காணப்படும். அனைவரையும் அனுசரித்து செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செழிக்கும். மேல் அதிகாரிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மாறும். கூடுதல் வருமானத்திற்கு வழி அமைத்துக் கொள்வீர்கள்.

விரும்பிய பொருட்களை வாங்க முடியும். தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பதை வைத்துக் கொண்டு திட்டமிடுவது நல்லது. தடைகளை உடைத்து வெற்றி பெறும் சூழல் உள்ளது. சோதனைகளை சாதனைகளாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். கனவுகள் நினைவாகும்.

கற்பனை திறன் மிகுந்து காணப்படும். இன்று மாணவர்கள் முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். கல்வி மீது ஆர்வம் அதிகரிக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்