கன்னி ராசி அன்பர்களே,

இன்று செய்யும் பணிகளில் முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர்களின் சூழ்நிலை புரிந்துகொண்டு பணியில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். முக்கியமான செயல்கள் தங்கு தடை இன்றி நடைபெறும். காரியங்கள் மிகவும் அற்புதமாக நடைபெறும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும் சூழல் ஏற்படும். நம்பிக்கையுடன் செயல்பட்டு எதிலும் வெற்றி பெற முடியும்.

பணவரவு திருப்தியைக் கொடுக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சக பணியாளர்களிடம் கவனமாக பழக வேண்டும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். படிப்படியாக முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். மனதிருப்தியுடன் காணப்படுவீர்கள். காரியங்கள் கண்டிப்பாக சூடு பிடிக்கும்.

இன்று மாணவர்கள் முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். குழப்பங்கள் எல்லாம் கண்டிப்பாக சரியாகும். கல்விக்கான செலவுகள் கொஞ்சம் இருக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்