சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று அடுத்தவர்கள் பாராட்டும் அளவு நடந்து கொள்வீர்கள். பொருளாதார நிலையை சீராக உயர்த்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில் உங்களுக்கு கடினமான சூழல் மாறும். பண வரவு திருப்தியை கொடுக்கும். பணியாளர்கள் பணி சுமையை திறம்பட சமாளிக்க வேண்டியது இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். தொழிலாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் பல முன்னேற்ற பாதைகளுக்கு வழிவகுக்கும். நேர்மையாக காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நட்பால் நல்லது நடக்கும். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும்.

செய்யும் வேலைகளை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்படுவீர்கள். கல்வி மீது ஆர்வம் கொள்வீர்கள். புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் ஐந்து

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்