விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்றைய தினம் நீங்கள் தனித்து செயல்படுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும் சூழல் உள்ளது. உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். அரசு வழியில் நன்மை ஏற்படும். கவனமுடன் பணிகளில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும்.

எடுக்கும் முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் உயர்வுகளை காண முடியும். ஏற்றம் மிகுந்த நாளாக கண்டிப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் அற்புதமாக நடக்கும். பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. நெருங்கியவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். பெண்கள் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

சமையல் செய்யும்போது கவனம் தேவை. இன்று மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். பொறுப்புகள் கூடிவிடும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: மூன்று, ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்