மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பாடன் பைபாஸ் சாலையில், லாரி ஒன்றில் இருந்து ஆயுதம் ஏந்திய கும்பல் பட்டப்பகலில் டீசலை கொள்ளையடித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், கையில் வாள் மற்றும் துப்பாக்கிகளை ஏந்திய சில இளைஞர்கள் லாரி ஓட்டுநரை மிரட்டி, பெரிய கேன்களில் டீசலை நிரப்பிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், துணிச்சலாக நடத்தப்பட்ட இந்த கொள்ளைச் சம்பவம் அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதால் சிக்கனமாக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி வரும் நிலையில், இப்படி ஆயுதங்களுடன் வந்து எரிபொருளைக் கொள்ளையடிப்பது சமூகத்திற்கு விடுக்கப்பட்ட பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.

“>

 

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தப்பியோடிய மர்ம கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஒரு லாரியை வழிமறித்து இப்படி சினிமா பாணியில் கொள்ளையடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.