மகாராஷ்டிர மாநிலம் கல்யான் அருகே உள்ள முர்பாட் பேருந்து நிலையத்தில், பேருந்து விவரம் கேட்ட இளைஞரை அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் கல்யான் செல்வதற்கான பேருந்து எப்போது வரும் என்று அங்கிருந்த அதிகாரியிடம் விசாரித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு வந்த தத்தா பலேராவ் என்ற ஓட்டுநர், அந்த இளைஞரை பொதுமக்களின் முன்னிலையிலேயே சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்கிருந்தவர்களின் செல்போனில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஓட்டுநரின் ஒழுங்கீனமான செயலைக் கண்டித்து பலரும் பதிவிடத் தொடங்கினர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழக நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் தத்தா பலேராவை அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

“>

 

அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் பயணிகளிடம் கண்ணியமாக நடக்க வேண்டும் என்றும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு சாதாரணத் தகவலைக் கேட்டதற்காகப் பயணி தாக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.