அதிமுக கூட்டணியில் இன்னும் ஓரிரு நாட்களில் புதிய கட்சி ஒன்று இணையப்போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு ‘சஸ்பென்ஸ்’ தகவலை வெளியிட்டுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணலில் கலந்துகொண்ட நிர்வாகிகளிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணி ஏற்கனவே மிகவும் வலிமையாக இருப்பதாகவும், மேலும் சில முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறி உற்சாகப்படுத்தினார்.
”யாரும் கவலைப்பட வேண்டாம், நம்பிக்கையுடன் இருங்கள்” என்று தொண்டர்களுக்கு தைரியம் கொடுத்த இபிஎஸ், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று உறுதியளித்துள்ளார். பாமக ஏற்கனவே கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், அடுத்ததாகப் பெரிய கட்சி எது வரும் என்ற எதிர்பார்ப்பு இப்போது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
