தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது திமுக கூட்டணி வேண்டுமா அல்லது விஜய்யின் தவெக கூட்டணி வேண்டுமா என்ற இருவேறு கருத்துகளால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் வெற்றியை உறுதி செய்ய திமுக கூட்டணியே சிறந்தது என நினைக்கின்றனர்.
ஆனால், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் போன்ற மற்றொரு தரப்பினர் தவெக-வுடன் கூட்டணி வைத்தால் அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கிடைக்கும் என நம்புகின்றனர். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் 70 தொகுதிகள் மற்றும் மந்திரி பதவி போன்ற வாக்குறுதிகளைக் கொடுத்து காங்கிரஸை ஈர்க்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டணி குழப்பத்தால் திமுக தலைமை அதிருப்தியில் உள்ள நிலையில், இது ஒரு அரசியல் தந்திரமாக இருக்கலாம் எனவும் பார்க்கப்படுகிறது.
அதாவது, தவெக-வின் ஆஃபரை காட்டி திமுக-விடம் கூடுதல் தொகுதிகளையும், ராஜ்யசபா சீட்டையும் பேரம் பேசிப் பெற காங்கிரஸ் முயல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இறுதியில் காங்கிரஸ் பழைய கூட்டணியில் நீடிக்குமா அல்லது விஜய்யுடன் கைகோர்த்துப் புதிய பயணத்தைத் தொடங்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
