தமிழக மின்வாரியத்தால் புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு இணையதளம் ஆனது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட மற்ற சேவைகளையும் மின் நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக இந்த இணையதளமானது தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய இணையதளத்திலிருந்து மத்திய அரசினுடைய மின் சேவைகள், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போன்றவற்றின் இணையதளங்களுக்கு செல்வது உள்ளிட்ட பல புதிய வசதிகளும் இந்த புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது