தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், “மூன்று மாதங்களில் 20,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது” என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சமூக ஆர்வலர் ஒருவர் பேசிய காணொளி தற்போது சமூக வலைதளமான எக்ஸ் (X) பக்கத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசிய அவர், “3 மாதத்தில் 20,000 கோடி கடன் வாங்கியதாகக் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? எவிடன்ஸ் இருக்கிறதா? இது முற்றிலும் எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டு நடத்தப்படக்கூடிய ஒரு பொய் பிரசாரம் (False Narrative)” என்று மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
மேலும் கடன் குறித்த உண்மையான புள்ளிவிவரங்களை விவரித்த அவர், “தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Official Website) எடுத்துப் பார்த்தால் உண்மை தெரியும். கடந்த காலங்களில் வாங்கிய சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் கடனுக்காக, தவெக அரசு தற்போது சுமார் 13,900 சில்லறை கோடி ரூபாயை வட்டியாக மட்டுமே கட்டியுள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியதை போய், புதிய கடன் வாங்கியதாக எப்படிச் சொல்வீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த அரசைத் திட்டமிட்டு குறை சொல்வதை விட்டுவிட்டு, கொஞ்சம் செயல்பட விடுங்கள், குறைந்தது ஒரு வருஷமாவது நேரம் கொடுங்கள். கடந்த 50-60 வருடங்களாக திராவிட கட்சிகள் செய்யாத ஊழலையா இந்த குறுகிய காலத்தில் தவெக அரசு செய்துவிடப் போகிறது? ஏதேனும் டிஸ்ட்ரிக்ட் வாங்கி வளைத்துப் போட்டார்களா? எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிறுத்திவிடாமல், தவெகவின் இணையதளப் போராளிகளான ‘வெர்ச்சுவல் வாரியர்ஸை’ (Virtual Warriors) அவர் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். “இன்றைக்குத் தமிழக வெற்றிக் கழகமும் தவறு செய்யும்போது இல்லை என்று மறுக்கவில்லை. தவெகவின் வெர்ச்சுவல் வாரியர்ஸை நான் உண்மையிலேயே பாராட்டுவேன்.
ஏனென்றால், மற்ற கட்சிகளைப் போலத் தங்கள் கட்சி செய்வது எல்லாவற்றிற்கும் முட்டுக்கொடுக்காமல் (பரிந்து பேசாமல்), தவறு என்றால் தட்டி கேட்கிறார்கள். இரவும் பகலும் உட்கார்ந்து இந்த ஒரு தலைவருக்காகச் சண்டை போட்டவர்கள், இன்றைக்குத் தவறுகள் நடக்கும்போது கேள்வி கேட்கிறார்கள்; அவர்களுக்கு அந்த முழு உரிமையும் உள்ளது” என்று குறிப்பிட்டார்.
20000 கோடி கடன் பத்தி பேசுபவர்களுக்கு இது 14000 கோடி வட்டி கட்டிருக்கிறது இத பத்தி ஏன் பேசல வாங்கிய 10 லட்சம் கோடிக்கு வாங்குயவர்களுக்கு இது தெரியாதா வட்டி pic.twitter.com/9DhWV7xHdl
— Galattatamilan2.0 (@tamilanme192) July 28, 2026
இறுதியாக, “வெர்ச்சுவல் வாரியர்ஸ் தொடர்ந்து தவறுகளைச் சரியாகக் கேள்வி எழுப்பினால் மட்டுமே தமிழக வெற்றிக் கழக அரசு இன்னும் சிறப்பாகச் செயல்படும்” என்று கூறி தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். சமூக ஆர்வலரின் இந்த நியாயமான விளக்கமும், எதிர்க்கட்சிகளுக்குச் சவாலாக அமைந்த இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் தவெக தொண்டர்களாலும் நடுநிலையாளர்களாலும் அதிகளவில் பகிரப்பட்டு பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
